டிரெட்மில் இயந்திரத்தில் கால்பந்தை உதைத்து கின்னஸ் சாதனை

0 1506

வெனிசுலாவைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை ஒருவர் தனது உடற்பயிற்சி கூடத்தில் டிரெட்மில் இயந்திரத்தில் ஒரு நிமிடத்தில் 170 முறை தன் காலால் பந்தை உதைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் பங்கேற்ற Laura Biondo என்ற அந்த வீராங்கனை இந்த சாதனையை செய்ய தொடர்ந்து 10நாட்கள் தீவிர பயிற்சி எடுத்ததாக தெரிவித்தார்.

ஓடிக் கொண்டிருக்கும் டிரெட்மில் இயந்திரத்தில் காலால் பந்தை விடாமல் தொடர்ந்து அடித்து கொண்டிருப்பது போட்டியின் விதியாகும். இதற்கு முன்பு ஒரு நிமிடத்திற்கு 120 முறை செய்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments