கொரோனா தொற்றில் இருந்து மீண்ட 110 வயது மூதாட்டி..!

0 1726
கர்நாடகாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 110 வயது மூதாட்டி, சிகிச்சைக்குப் பிறகு ஐந்தே நாட்களில் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

கர்நாடகாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 110 வயது மூதாட்டி, சிகிச்சைக்குப் பிறகு ஐந்தே நாட்களில் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

கடந்த 27ம் தேதி நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட சித்தம்மா எனும் மூதாட்டி, சித்ரதுர்கா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய அவரிடம் கொரோனா தொடர்பாக கேட்டபோது, தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சொன்னபோது பீதியடையவில்லை, மேலும் அதன் பொருள் என்னவென்றும் எனக்குத் தெரியவில்லை என தெரிவித்தார்.

மேலும், அவர்கள் தன்னை மருத்துவமனைக்கு கொண்டு வந்து, வெதுவெதுப்பான நீரையும் கஞ்சியையும் கொடுத்தார்கள் என பதிலளித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments