ஐதராபாத் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்

0 873

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதலாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் ஐதராபாத் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, சென்னை அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

மும்பையில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பிராத்வெய்ட் 43 ரன்கள் எடுத்தார்.

140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. ஐதராபாத் அணியின் துல்லியமான பந்து வீச்சில் சென்னை அணி தடுமாறியது. டூ பிளெஸ்ஸிஸ் 67 ரன்களைக் குவித்து சென்னை அணியை வெற்றிக்கு பாதைக்கு அழைத்து சென்றார். 19 புள்ளி ஒன்று ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்து சென்னை அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ளது. வெளியேற்றும் சுற்றுக்கான போட்டியில் கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments