ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல்... இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம்..!

0 3061
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் இன்று அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர்.

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் இன்று அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர்.

ரஜோரி செக்டாரில் ((Rajouri  sector)) உள்ள எல்லை கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய ராணுவ வீரர் ரோஹின் குமார் என்பவர் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் படையினருக்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். பூஞ்ச் மாவட்டம் பாலாகோட் செக்டாரிலும் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments