தரச்சான்று இல்லாத தலைக்கவசங்களை விற்பது குற்றச் செயல் - மத்திய போக்குவரத்து அமைச்சகம்..!

0 1795
பி.ஐ.எஸ் தர சான்றிதழ் இல்லாத தலைக்கவசங்களை விற்பனை செய்வது குற்றச் செயல் என, மத்திய போக்குவரத்து அமைச்சகம் வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பில் தலைக்கவசம் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதன் காரணமாகவே இருசக்கர வாகனத்தை இயக்குபவர் மட்டுமின்றி உடன் செல்லக்கூடியவரும் தலைக்கவசம் அணிவது நாட்டில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிகரித்துள்ள போலி தலைக்கவசங்கள் விற்பனையை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தரமில்லாத ஹெல்மெட் அணிவது ஹெல்மெட் அணியாமல் இருப்பதை விட ஆபத்தானது என வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்தாண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments