தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் காற்றுடன் கனமழை..!

0 6599
தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

சென்னையில் நள்ளிரவில் சுமார் ஒரு மணி நேரம் காற்றுடன் கூடிய மழை பெய்தது. மாதவரத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பழ மார்க்கெட்டில் கடைகளுக்குள் நீர் புகுந்ததால் வியாபாரிகள் அவதிக்குள்ளாகினர். 

நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, நாகூர், சிக்கல், கீழ்வேளூர், திருக்குவளை, விழுந்தமாவடி, திருமருகல் உள்ளிட்ட இடங்களில் இரவு முழுவதும் விடிய விடிய கனமழை பெய்தது. 

பெரம்பலூர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குன்னம், வாலிகண்டபுரம், வேப்பந்தட்டை உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. 

சேலத்தில் அரை மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததால் சாலைகளில் மழை நீர் வெள்ளமாக ஓடியது. அதுபோல் ஊட்டி, செஞ்சி, கும்பகோணம், சீர்காழி உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments