11 ஆம் வகுப்பில் தேர்வு நடைபெறாத பாடங்களில் ஒருசிலர் தோல்வி - தேர்வுத்துறை

0 2566
பதினோராம் வகுப்பில் தேர்வு நடத்தாத பாடங்களில் அனைவரும் தேர்ச்சி என அறிவித்த நிலையில் ஒருசில மாணவர்கள் தேர்ச்சி பெறாதது குறித்துத் தேர்வுத் துறை விளக்கம் அளித்துள்ளது.

பதினோராம் வகுப்பில் தேர்வு நடத்தாத பாடங்களில் அனைவரும் தேர்ச்சி என அறிவித்த நிலையில் ஒருசில மாணவர்கள் தேர்ச்சி பெறாதது குறித்துத் தேர்வுத் துறை விளக்கம் அளித்துள்ளது.

ஊரடங்கால் பதினோராம் வகுப்பில் கணக்குப் பதிவியல், புவியியல், வேதியியல் பாடத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்தப் பாடங்களில் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

இந்நிலையில் தேர்வு முடிவில், கணக்குப் பதிவியல், புவியியல், வேதியியல் பாடங்களில் சில மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. ஒரு பாடத்தின் செய்முறை,  எழுத்துத்தேர்வு ஆகிய இரண்டிலும் பங்கேற்றால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும் எனத் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேர்வு நடத்தாத பாடங்களுக்கான செய்முறைத் தேர்வில் பங்கேற்காதவர்களுக்கும், பிற பாடங்களின் தேர்வுகளை எழுதாதவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments