தமிழகத்தில் மேலும் 5881 பேருக்கு கொரோனா.. இரண்டாவது நாளாக 97 பேர் பலி..!

0 5244
தமிழ்நாட்டில் இன்று 5881 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில், புதிதாக 5 ஆயிரத்து 881 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித் துள் ளது. இவர்களில், 31 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள்.

இதுவரை,கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 2 லட்சத்து 46 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டது.

வைரஸ் தொற்றில் இருந்து, ஒரே நாளில் 5  ஆயிரத்து 778 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் 2 ஆவது நாளாக கொரோனாவுக்கு  97 பேர் பலியாகி உள்ளனர். சென்னையில் புதிதாக ஆயிரத்து 13 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

காஞ்சி புரத்தில் அதிகபட்சமாக 485 பேரும் ,திருவள்ளூரில் 373 நபர்களும், செங்கல்பட்டில் 334 பேரும் புதிதாக கொரோனா வால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுதவிர, ராணிப்பேட்டையில் 359 பேருக்கும், விருதுநகரில் 357 நபர்களுக்கும், தேனியில் 299 பேருக்கும்,  தூத்துக்குடியில் 284 நபர்களுக்கும் புதிதாக வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments