வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் அனைவரையும் மீட்பதில் உறுதி-மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் அறிக்கை

0 4031
கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் அத்தனை பேரையும் தாயகம் மீட்டு வருவதில் தீர்க்கமாக இருப்பதாக மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் அத்தனை பேரையும் தாயகம் மீட்டு வருவதில் தீர்க்கமாக இருப்பதாக மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், கொரோனா காரணமாக வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் அத்தனை தமிழர்களையும் தாயகம் மீட்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 5 ம் தேதி முதல் 31ம் தேதி வரை இந்தியாவுக்கு இயக்க உள்ள 792 விமானங்களில், தமிழகத்துக்கு 127 விமானங்கள் இயக்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments