3 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும்-வானிலை மையம்

0 12817
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், தருமபுரி, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், தருமபுரி, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காவேரிப்பாக்கம், ஏற்காட்டில் தலா 7 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் வேலூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், தருமபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், வட கடலோர தமிழக மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில பகுதிகளில் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments