பொறியியல் கலந்தாய்வுக்கான சான்றிதழ் பதிவேற்றும் பணி தொடக்கம்

0 1455
பொறியியல் கலந்தாய்வுக்கான சான்றிதழ் பதிவேற்றும் பணி தொடங்கியுள்ளது.

பொறியியல் கலந்தாய்வுக்கான சான்றிதழ் பதிவேற்றும் பணி தொடங்கியுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு 1 லட்சத்து 28 ஆயிரம் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.

அந்த விண்ணப்ப பதிவுக்கான அவகாசம் ஆகஸ்ட் 16இல் நிறைவடையும் சூழலில், கலந்தாய்வுக்காக www.tneaonline.org இணையதளத்தில் மாணவர்கள், தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர். ஆகஸ்ட் 20 வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் என்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் கூறியுள்ளது.

பதிவேற்றத்தில் சந்தேகங்கள் இருந்தால் 044-22351014, 044-22351015 ஆகிய எண்களுக்கு அழைக்கலாம் என்றும், சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 1 வரை நடைபெறும் என்றும் அந்த இயக்ககம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments