ஊரடங்கு நீட்டிப்பு - அரசாணை வெளியீடு

0 10582
தமிழகத்தில் ஆகஸ்டு 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆகஸ்டு 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் வெளிடப்பட்டுள்ள அரசாணையில், திருமண விழாக்களில் 50 பேருக்கு மிகாமலும், இறந்தவரின் இறுதிச் சடங்கில் 20 பேருக்கு மிகாமலும் பங்கேற்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளது.

65 வயதுக்கு மேற்பட்டோர், கருவுற்ற பெண்கள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வீட்டிலேயே தங்கி இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் அறிவுறுத்தல்களையும், வழிகாட்டு நெறிகளையும் மீறுவோர் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டம், இந்தியத் தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments