ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக் கோரியும், அந்த விளம்பரத்தில் நடித்த விராட் கோலி ,தமன்னா உள்ளிட்டோரை கைது செய்ய உயர்நீதிமன்றத்தில் மனு

0 1763
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக் கோரியும், அந்த விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்டோரை கைது செய்ய உத்தரவிடக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தொடரப்பட்டுள்ளது.

சென்னை வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனுவில், ஆரம்பத்தில் பொழுதுபோக்குக்காக ஆன்லைன் சூதாட்டத்துக்குள் செல்லும் இளைஞர்கள், பிறகு அடிமையாகிவிடும் சூழல் ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

ப்ளூவேல் விளையாட்டால் மாணவர்களை தற்கொலைக்கு தூண்டபட்டதையடுத்து, தடை விதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, ஆன்லைன் சூதாட்டங்கள் அதை விட வீரியமானது என்பதால் உடனடியாக தலையிட்டு தடை விதிக்க வேண்டும்,விராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்டோரை கைது செய்ய உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த நீதிபதிகள், செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்வதாக தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments