அகில இந்திய வழக்கறிஞர்கள் தகுதி தேர்வு தள்ளிவைப்பு

0 740
ஆகஸ்ட் 16இல் நடக்க இருந்த அகில இந்திய வழக்கறிஞர்கள் தகுதி தேர்வை கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைத்து இருப்பதாக அகில இந்திய பார்கவுன்சில் அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 16இல் நடக்க இருந்த அகில இந்திய வழக்கறிஞர்கள் தகுதி தேர்வை கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைத்து இருப்பதாக அகில இந்திய பார்கவுன்சில் அறிவித்துள்ளது.

சட்டப் படிப்பை முடித்தவர்கள் வழக்கறிஞராக பதிவு செய்த பிறகு  அகில இந்திய பார்கவுன்சில் நடத்தும் தகுதி தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இந்த தகுதி தேர்வு அகில இந்திய அளவில் ஆகஸ்ட் 16ம் தேதி நடைபெறுவதாக இருந்தது.

கொரோனா  பரவல் அதிகரித்துவரும் நிலையில், தேர்வை தள்ளி வைப்பது என்று முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும், விண்ணப்பம் செய்யும் தேதி ஆகஸ்ட் 31வரை நீட்டிக்கப்படுகிறது என்றும் பார்கவுன்சில் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments