சர்வதேச அளவில் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் பட்டியலில் இந்தியா 5வது இடம்

0 2001
சர்வதேச அளவில் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தை அடைந்துள்ளது.

கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் இத்தாலியை முந்தி இந்தியா ஐந்தாமிடத்தில் உள்ளது.

இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 779 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 747 ஆக உயர்ந்தது.

35,132 பேர் கொரோனாவால் உயிரிழந்த இத்தாலி ஆறாமிடத்தில் உள்ளது. அதிகம் பேர் உயிரிழந்த நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாமிடத்திலும் உள்ளன.

மெக்சிகோ மூன்றாமிடத்திலும், பிரிட்டன் நான்காமிடத்திலும் உள்ளன. இன்றைய நிலவரப்படி உலக அளவில் கொரோனாவால் 6 லட்சத்து 76 ஆயிரத்து 794 பேர் உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments