டயாலிசிஸ் மையத்தில் மிஸ் தமிழ்நாடு முகத்தில் மிஸ்ஸான முககவசம்..! மெத்தனமா ? மறதியா?

0 11046
சென்னை மயிலாப்பூரில் உள்ள டயாலிசிஸ் மையம் ஒன்றில் சமூக இடைவெளியின்றி கூடி, தனது பிறந்தநாளைக் கொண்டாடிய மிஸ் தமிழ்நாடு பட்டம் பெற்ற இளம் பெண் மருத்துவர், முகக்கவசம் அணியாமல் அங்கு சிகிச்சையில் இருந்தவர்களுக்கு பூ பழங்கள் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மயிலாப்பூரில் உள்ள டயாலிசிஸ் மையம் ஒன்றில் சமூக இடைவெளியின்றி கூடி, தனது பிறந்தநாளைக் கொண்டாடிய மிஸ் தமிழ்நாடு பட்டம் பெற்ற இளம் பெண் மருத்துவர், முகக்கவசம் அணியாமல் அங்கு சிகிச்சையில் இருந்தவர்களுக்கு பூ பழங்கள் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை சமூக இடைவெளி, முகக்கவசம் மற்றும் கைகளை சோப்பு போட்டு கழுவுதல் அவசியம் என்று அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் மிஸ் தமிழ்நாடு பட்டம் பெற்றவர்களில் ஒருவரான மருத்துவர் ஷீபா என்பவர் மயிலாப்பூரில் உள்ள டயாலிசிஸ் சிகிச்சை மையத்தில் இரு தினங்களுக்கு முன்பு முகக்கவசம் இன்றி சமூக இடைவெளியையும் பின்பற்றாமல் பிறந்த நாள் கொண்டாடியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வின்னர் படவில்லன் நடிகர் ரியாஸ்கான் காரை விட்டு இறங்கியதும் முகக்கவசத்தை கழற்றிவிட்டார். அவரை போலவே மேலும் சிலரும் முகக்கவசத்தை கையில் வைத்துக் கொண்டு சமூக இடைவெளியின்றி காணப்பட்டனர்.

இதற்கெல்லாம் ஒருபடி மேலே முகக்கவசம் இன்றி அங்கு சிகிச்சையில் இருக்கும் வயதான நோயாளிகளை சந்தித்த மருத்துவர் ஷீபா, அவர்களது கையில் பூ மற்றும் பழங்களை வழங்கினார். மூச்சுக்காற்றில் பரவும் நீர்த்திவலைகள் மூலமும், ஒருவர் தொடும் பொருளை மற்றொருவர் தொடுவதாலும் கொரோனா பரவும் என்ற சூழ்நிலையில் அரசின் விதியை மீறி மெத்தனமாக ஷீபா பிறந்த நாளை கொண்டாடியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் அதே நாள், அப்துல்கலாம் நினைவுதினத்தையொட்டி மரக்கன்று வழங்குவதாக கூறி சித்தாலப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றிக்கு டைட் மேக்கப்புடன் சென்ற மருத்துவர் ஷீபா, அங்கும் முககவசம் அணியாமல் பொது நிகழ்ச்சியில் பங்கேற்று சால்வை பெற்றுக் கொண்டார்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியானதால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் அனுமதியின்றி இது போன்ற நிகழ்ச்சிகள் எப்படி நடத்தப்பட்டன? என்று கேள்வி எழுந்ததால், பிறந்த நாள் விழா நடந்த பகுதியில் உள்ள மாநகராட்சி அதிகாரிகள் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே தான் முகக்கவசம் அணியாவிட்டாலும் தன்னுடன் விழாவில் பங்கேற்றவர்கள் முகக்கவசம் அணிந்திருந்ததாக மருத்துவர் ஷீபா விளக்கம் அளித்துள்ளார்.

அதே நேரத்தில் தன்னை சமூக ஆர்வலராக அடையாளப்படுத்திக் கொள்ளும் மிஸ் தமிழ்நாடு ஷீபா இனியாவது பொதுஇடத்தில் முகக்கவசத்துடன் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments