தோட்ட தொழிலாளி மீது எச்சில் துப்பியவனின் கன்னம் பழுத்தது..! வீரத்தமிழனின் தரமான சம்பவம்

0 102420
மலேசியாவில் கார்டன் வேலையில் இருந்த தொழிலாளி மீது எச்சிலை துப்பி அவமானப்படுத்திய, இந்தோனேசிய இளைஞருக்கு கன்னம் பழுக்க, தமிழ்நாட்டு இளைஞர் கொடுத்த அடிகள் இணையத்தில் வைரலாகிறது...

மலேசியாவில் கார்டன் வேலையில் இருந்த தொழிலாளி மீது எச்சிலை துப்பி அவமானப்படுத்திய, இந்தோனேசிய இளைஞருக்கு கன்னம் பழுக்க, தமிழ்நாட்டு இளைஞர் கொடுத்த அடிகள் இணையத்தில் வைரலாகிறது...

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் தோட்டவேலை செய்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவரை சத்தம் போட்டு மிரட்டிய இந்தோனேசிய இளைஞர் ஒருவர் அவர் மீது எச்சிலை துப்பி அவமானப்படுத்தி சென்றதாக கூறப்படுகின்றது.

இதை கவனித்த தமிழக இளைஞர் ஒருவர் சம்பந்தப்பட்ட இந்தேனேசிய இளைஞரை மறித்து அவருக்கு புரிந்த மொழியில், எதற்காக அந்த தொளிலாளி மீது எச்சிலை துப்பினாய் எனக்கேட்டு கன்னம் பழுக்க கொடுத்த பளார் அறைகள் ஒவ்வொன்றும் அதிரடியாக இருந்தது.

தான் வேலை சரியாக செய்யவில்லை என்று உரிமையாளரிடம் மாட்டிவிட்டுவிடுவேன் என மிரட்டி தன் மீது எச்சிலை துப்பியதாக அந்த ஆந்திர தொழிலாளி அப்பாவியாக தெரிவித்தார்.

 

இந்தோனேசிய இளைஞரை அடித்தது சரியா? தவறா? என்பது ஒரு புறம் இருந்தாலும் சக மனிதனை அவமானபடுத்தியவனுக்கு வீழ்ந்துவிடாத வீரத்தால் பதில் சொல்லிய விதம் நெட்டிசன்களை கவர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments