கூடுதல் தளர்வுகளுடன் நாளை முதல் அமலுக்கு வரும் ஊரடங்கு

0 15214
தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கில், ஜூன் மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள் இன்றுடன் முடிவடையும் நிலையில், நாளை முதல் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வர உள்ளன.

தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கில், ஜூன் மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள் இன்றுடன் முடிவடையும் நிலையில், நாளை முதல் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வர உள்ளன.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும், ஊரடங்கை ஆகஸ்ட் இறுதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளார்.

அதன்படி, நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆகஸ்ட் மாதத்தில் உள்ள 5 ஞாயிற்றுக்கிழமைகளிலும் எவ்வித தளர்வுகளும் இன்றி, தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

தொடர்ந்து, பொதுப்போக்குவரத்திற்கான தடை ஆகஸ்ட் மாதத்திலும் தொடரும், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், மின்சார மற்றும் மெட்ரோ ரயில்கள் ஓடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை, பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும். தியேட்டர்கள், ஷாப்பிங் மால்களை திறக்கவும் அனுமதி இல்லை.

அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சாரநிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு தடை தொடர்கிறது.

சென்னையில் உணவகங்கள் 50 சதவீத இருக்கைகளில் வாடிக்கையாளர்களை அனுமதிக்கவும், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் 75 சதவீத பணியாளர்களுடன் இயங்கவும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அனைத்து வித பொருட்களையும் விநியோகிக்க ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் கூடுதலாக ஒரு மணி நேரம் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments