கணித மேதை சகுந்தலா தேவி-கின்னஸ் சான்றிதழ்

0 3238

உலகில் மிகவும் வேகமாக கணக்கிடும் மனிதர் என்ற கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழ் காலஞ்சென்ற கணித மேதை சகுந்தலா தேவிக்கு வழங்கப்பட்டது.

கடந்த 1980 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் தேதி லண்டன் இம்பீரியல் கல்லூரியில் வைத்து நடந்த நிகழ்ச்சியில், பார்வையாளர்கள் தேர்ந்தெடுத்த இரண்டு 13 இலக்க எண்களை பெருக்கி 28 வினாடிகளில் விடை அளித்தார் சகுந்தலா தேவி.

அது உலக சாதனையாக அறிவிக்கப்பட்டாலும், 40 ஆண்டுகளாக அதற்கான சான்றிதழ் வழங்கப்படவில்லை, இந்த நிலையில்  சகுந்தலா தேவி என்ற பெயரில் தயாராகி உள்ள திரைப்பட படப்பிடிப்பிற்காக லண்டன் சென்ற நடிகை வித்யா பாலன் உள்ளிட்டோர், கின்னஸ் நிறுவனத்திடம் இது குறித்து பேசினர். இதை அடுத்து, சகுந்தலா தேவியின் மகளான அனுபமா பானர்ஜியிடம் சாதனைக்கான சான்றிதழை கின்னஸ் நிறுவனம் வழங்கியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments