அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 3 முதல் விலையில்லா புத்தகம் விநியோகம்

0 3530
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் விலையில்லா புத்தகம் மற்றும் புத்தகப் பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் விலையில்லா புத்தகம் மற்றும் புத்தகப் பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்ட சுற்றறிக்கையில், 2,3,4,5,7, மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நிலையான செயல்பாட்டு  நெறிமுறைகளைப் பின்பற்றி, ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் விலையில்லா பாட நூல்கள் மற்றும் புத்தகப் பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதனைப் பெறுவதற்காக பள்ளிக்கு வரும் மாணவர்கள் அல்லது பெற்றோர் முகக் கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மணி நேரத்திற்கு 20 மாணவர்கள் என கால அட்டவணையைப் பின்பற்றி மாணவர்களுக்கு பாடநூல்கள் மற்றும் புத்தகப் பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments