செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை ஏவிய ”நாசா”

0 1500
அமெரிக்காவின் புளோரிடா மாகானத்தில் உள்ள Cape Canaveral ஏவுதளத்தில் இருந்து, செவ்வாய் கிரகத்திற்கு நாசா நிறுவனம் விண்கலத்தை ஏவி உள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகானத்தில் உள்ள Cape Canaveral ஏவுதளத்தில் இருந்து, செவ்வாய் கிரகத்திற்கு நாசா நிறுவனம் விண்கலத்தை ஏவி உள்ளது.

இம்மாதம், செவ்வாய் கிரகம் பூமிக்கு மிக அருகில் உள்ளதால், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சீனாவை தொடர்ந்து, அமெரிக்காவும், 18,000 கோடி ரூபாய் மதிப்பிலான விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு செலுத்தி உள்ளது.

Perseverance எனப் பெயரிடப்பட்டுள்ள விண்கலத்துடன், 6 சக்கர வாகனமும், சிறிய ரக helicopter-உம், செவ்வாய் கிரகத்துக்கு Atlas-5 ராக்கெட் மூலம் , அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தை சென்றடையும் இந்த விண்கலம், ஏறத்தாழ 687 நாட்களுக்கு அங்கு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது.

செவ்வாய் கிரகத்தில், மனிதன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதுடன், மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்து பூமிக்கு எடுத்து வர உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments