நடிகர் சுஷாந்த் சிங் காதலி ரியா சக்ரபர்த்தி தலைமறைவு

0 2596
நடிகர் சுஷாந்த் சிங்கை தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் அவரது காதலி ரியா சக்ரபர்த்தி தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது.

நடிகர் சுஷாந்த் சிங்கை தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் அவரது காதலி ரியா சக்ரபர்த்தி தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது.

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை மும்பை போலீசார் விசாரித்து வரும் நிலையில், அவரது சொந்த ஊரான பீகார் மாநிலம் பாட்னாவில் சுஷாந்தின் தந்தை, காதலியும் நடிகையுமான ரியா சக்ரபர்த்திக்கு எதிராக புகார் அளித்தார்.

அதனடிப்படையில் தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள பாட்னா ராஜீவ் நகர் போலீசார், ரியாவை கைது செய்வதற்காக மும்பை விரைந்துள்ளனர்.

இந்த நிலையில் மும்பையில் உள்ள ரியாவின் வீட்டுக்குச் சென்றபோது, அவரைக் காணாததால் ரியா சக்ரபர்த்தி தலைமறைவாகி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments