வேடிக்கை பார்த்த இளைஞரை காலால் உதைத்த காவலர்...

0 7046
உத்தரபிரதேசத்தில் கங்கை ஆற்றங்கரை ஓரத்தில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவரை காவலர் உதைத்தால், அந்த நபர் ஆற்றில் தவறி விழும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உத்தரபிரதேசத்தில் கங்கை ஆற்றங்கரை ஓரத்தில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவரை காவலர் உதைத்தால், அந்த நபர் ஆற்றில் தவறி விழும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மிர்சாபூர் நகரில் கங்கா கட் பகுதியில் ஆற்றில் விழுந்த ஒருவரின் உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்துள்ளது. அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இளைஞரை, செல்போனில் பேசிக்கொண்டே வந்த காவலர் ஒருவர் காலால் உதைத்துள்ளார். இதில் நிலைதடுமாறிய அந்த நபர், பக்கவாட்டில் சரிந்து தலைகுப்புற கவிழ்ந்து ஆற்றில் விழுந்துள்ளார்.

அதிர்ஷ்டவசமாக அந்த நபர் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments