மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

0 5091
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஊரடங்கு கட்டுப்பாடுகள், தளர்வுகள் குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளன.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஊரடங்கு கட்டுப்பாடுகள், தளர்வுகள் குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளன.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஆலோசனைகள் வழங்கவும், சிகிச்சை நெறிமுறைகளை வகுக்கவும் 19 மருத்துவர்கள் கொண்ட நிபுணர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

இந்த குழுவினர் ஏற்கனவே 6 முறை முதலமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைகளை பரிசீலித்தே, ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் குறித்து தமிழக அரசு அறிவித்து வருகிறது.

இந்நிலையில், நேற்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தற்போது மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தொற்று பரவலின் நிலை, மாவட்ட வாரியாக நிலவரம், நோய்த் தொற்று இரட்டிப்பாவதற்கு எடுத்துக் கொள்ளும் நாட்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், எத்தைகய கட்டுப்பாடுகள் தேவை, எத்தகைய தளர்வுகளை வழங்கலாம் என மருத்துவக் குழு பரிந்துரைக்க உள்ளது.

ஆலோசனைக்குப் பிறகு, அதுதொடர்பான அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட உள்ளது. ஆகஸ்ட் மாதத்திலும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வற்ற முழுஊரடங்கு தொடருமா, பொதுப்போக்குவரத்து அனுமதிக்கப்படுமா, இ-பாஸ் முறை தொடருமா என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments