சென்னையில் கடை நடத்த மாமூல் கொடுக்கனுமாம்..! பிரபல ரவுடி பகிரங்க மிரட்டல்

0 16922
சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவன், அங்குள்ள மருந்தக உரிமையாளரிடம் மாதந்தோறும் 50 ஆயிரம் ரூபாய் மாமூல் தரவேண்டும் என்றும், கடை நடத்த முடியாது என்றும் மிரட்டும் ஆடியோ வெளியாகி உள்ள நிலையில், வியாபாரிகள் சங்கத்தினர், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவன், அங்குள்ள மருந்தக உரிமையாளரிடம் மாதந்தோறும் 50 ஆயிரம் ரூபாய் மாமூல் தரவேண்டும் என்றும், கடை நடத்த முடியாது என்றும் மிரட்டும் ஆடியோ வெளியாகி உள்ள நிலையில், வியாபாரிகள் சங்கத்தினர், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். 

சென்னை மண்ணிவாக்கத்தில் மெடிக்கல் நடத்தி வருபவர் வினோத். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வினோத் , தங்கள் ஊரில் தொழில் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த, பிரபல ரவுடி சிலம்பரசன் என்பவன் மாதம் தோறும் 50 ஆயிரம் ரூபாய் மாமூல் கேட்டு செல்போன் மூலம் மிரட்டியுள்ளான்.

தான் கேட்ட மாமூல் பணத்தை வழங்காவிட்டால் கடை நடத்தமுடியாது என்றும், கடையை அடித்து நொறுக்கி விடுவேன் என்றும் அச்சுறுத்தும் வகையில் மிரட்டல் விடுத்துள்ளான்

ரவுடி சிலம்பரசன் ஏற்கனவே அந்த பகுதியில் இரும்புக்கடை நடத்தியவரை மிரட்டி மாமூல் கொடுக்காத ஆத்திரத்தில் அந்த கடையை சூறையாடிய வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், தன்னிடம் துப்பாக்கி உள்ளது என்பது போல முகநூலில் அவன் பதிவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தனக்கு வந்த மிரட்டல் குறித்து வினோத் ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அங்குள்ள போலீசாரோ, தாங்கள் ரவுடி சிலம்பரசனை பிடிக்கும் வரை கடையில் இருக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்ததாக கூறப்படுகின்றது.

இதையடுத்து ரவுடி மிரட்டல் விடுக்கும் ஆடியோ ஆதாரத்துடன் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்த வியாபரிகள் சங்க பேரவை தலைவர் முத்துக்குமார் கார்த்திகேயன் உள்ளிட்ட நிர்வாகிகள், ரவுடியை விரைவாக கைது செய்வதோடு மெடிக்கல் உரிமையாளர் வினோத்தின் தொழிலுக்கும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசியல் கட்சி ஒன்றின் ஆதரவாளராக இருந்து கொண்டு வழக்கில் சிக்காமல் தப்பி வருவதாக கூறப்படும், ரவுடி சிலம்பரசன் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments