நாட்டாமையை சீண்டிய மென் பொறியாளர்...! போலீசில் புகார்

0 4987
பிரபலங்கள் போலப் பேசும் சாப்ட்வேரைப் பயன்படுத்தி, நடிகர் சரத்குமார் பேசுவது போலப் பிரபலங்களுக்கு போன் செய்து, தொல்லை கொடுத்து வந்த கோவையைச் சேர்ந்த மென்பொறியாளர் மீது காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பிரபலங்கள் போலப் பேசும் சாப்ட்வேரைப் பயன்படுத்தி, நடிகர் சரத்குமார் பேசுவது போலப் பிரபலங்களுக்கு போன் செய்து, தொல்லை கொடுத்து வந்த கோவையைச் சேர்ந்த மென்பொறியாளர் மீது காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பேசுவது போல, சில பிரபலங்களின் செல்போன் எண்ணுக்கு மர்ம நபர் ஒருவர் அடிக்கடி பேசி தொல்லை கொடுத்து வந்துள்ளார். அந்த பிரபலங்கள் சரத்குமாரிடம் இருந்து ஏன் அடிக்கடி அழைப்புகள் வருகின்றன என சரத்குமாரைத் தொடர்பு கொண்டு விசாரிக்க, பேசியது தான் அல்ல என்று மறுக்கும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, தனது பெயரில், பேசிய நபர் அழைத்த செல்போன் எண்ணை , அந்த பிரபலத்திடம் இருந்து பெற்ற சரத்குமார், சம்பந்தப்பட்ட நபருக்கு போன் செய்து, அந்த போலியான நபர் யார் ? எதற்காக இப்படி செய்தார் ? என்பன போன்ற விவரங்களை அவரிடம் சாதுர்யமாக பேச்சுக் கொடுத்து கண்டறிந்தார்.

கோவையைச் சேர்ந்த மென்பொறியாளர் ஒருவர், சாப்ட்வேர் ஒன்றின் உதவியுடன் பிரபலங்களின் குரலைப் போல மற்ற பிரபலங்களுடன் உரையாடி தொல்லை கொடுத்தது தெரிய வந்ததையடுத்து, இது குறித்து சரத்குமார் தரப்பில் சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.

சரத்குமாரிடம் பேசிய நபர் தனக்கு கோவை என்று குறிப்பிடாலும், அவரது தமிழ் உச்சரிப்பு மலையாளம் கலந்து இருந்ததால் அவர் கேரளாவை சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் சாப்ட்வேர் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி பிரபலங்களை போல பேசி, பண மோசடியில் ஏதும் ஈடுபட்டாரா என்பது குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments