ஊடரங்கு தளர்வு 3.O மத்திய அரசின் அனுமதி மற்றும் தடைகள்.!

0 28745
ஊரடங்கில் இருந்து விலகும் 3ஆம் கட்ட தளர்வுகளையும் கட்டுப்பாடுகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இருப்பினும், அந்தந்த மாநிலங்களே, ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பது பற்றியும், கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றியும் முடிவெடுக்கலாம் என மத்திய அரசு கூறியுள்ளது.

ஊரடங்கில் இருந்து விலகும் 3ஆம் கட்ட தளர்வுகளையும் கட்டுப்பாடுகளையும்  மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இருப்பினும், அந்தந்த மாநிலங்களே, ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பது பற்றியும், கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றியும் முடிவெடுக்கலாம் என மத்திய அரசு கூறியுள்ளது. 

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஊரடங்கில் இருந்து விலகும் 3ஆம் கட்டத்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில், தியேட்டர்கள், கேளிக்கை பூங்காக்கள் இயங்குவதற்கு தடை தொடர்வதாக கூறப்பட்டுள்ளது.

நீச்சல் குளங்கள், மதுபான பார்களை திறப்பதற்கான தடை தொடரும் என்றும், மத நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்வுகள், பொது நிகழ்ச்சிகளுக்கு தடை நீடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 10 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் வீடுகளிலேயே தங்கி இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. சுதந்திர தின நிகழ்ச்சியில் ஏற்கனவே உள்ள அளவீடுகளை விட, கூடுதல் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், அதில் பங்கேற்கும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ், சர்வதேச பயணிகள் விமானங்களை குறைந்த அளவில் இயக்க அனுமதி வழங்கப்படும் என்றும், மாநிலத்திற்குள்ளும், மாநிலங்களுக்கு இடையிலும், சரக்குப் போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்திற்குள்ளும், மாநிலங்களுக்கு இடையிலும், தனிநபர்கள் சென்றுவருவது பற்றி மாநிலங்கள் முடிவெடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிம் மற்றும் யோகா பயிற்சி மையங்களை ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இரவு நேர ஊரடங்கையும் மத்திய அரசு நீக்கியுள்ளது. இருப்பினும், பொதுப்போக்குவரத்து உள்ளிட்டவற்றில், தளர்வுகள் அளிப்பது பற்றியோ அல்லது கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றியோ அந்தந்த மாநிலங்களே முடிவெடுக்கலாம் என்றும் மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments