ஆடுகளை திருடி அதன் உரிமையாளரிடமே பேரம் பேசி விற்க முயன்று தானகவே சிக்கிய திருடர்கள்

0 8529
திருச்சியில் ஆடுகளை திருடிய இருவர், அதன் உரிமையாளர் என தெரியாமல் அவரிடமே பேரம் பேசி விற்க முயன்று போலீசாரிடம் சிக்கினர்.

திருச்சியில் ஆடுகளை திருடிய இருவர், அதன் உரிமையாளர் என தெரியாமல் அவரிடமே பேரம் பேசி விற்க முயன்று போலீசாரிடம் சிக்கினர்.

மேல சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரின் 2 ஆடுகள் நேற்று முன்தினம் திருடப்பட்டன. பல இடங்களில் ஆடுகளை தேடி அலைந்த கந்தசாமி, திருட்டு ஆடுகள் காந்தி சந்தைக்கு இறைச்சிக்காக கொண்டு வர வாய்ப்புள்ளதாக கருதி அங்குச் சென்று பார்த்துள்ளார்.

அப்போது மூன்று ஆடுகள் விற்பனைக்கு உள்ளது என இருவர் முன்வந்து பேரம் பேச, ஆடுகளை நேரில் பார்க்க வேண்டும் என கூறி வாகனம் அருகே சென்றுள்ளார். அப்போது கந்தசாமியை பார்த்த அவரது ஆடு ஒன்று தாவிகுதித்து வந்து பாசத்தை பொழிந்தது.

தகவலறிந்து வந்த போலீசார் ஆடுகளை திருடிய தினேஷ், பெரியசாமி ஆகியோரை கைது செய்து மேலும் இருவரை தேடி வருகின்றனர். அவர்கள் மதுகுடிப்பதற்காக ஆடு திருட்டில் ஈடுபட்டுவந்தது விசாரணையில் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments