அரசு கல்லூரிகளில் சுழற்சி முறை வகுப்பு ரத்து - ஒரே ஷிப்ட் நடைமுறை அமல்

0 12090

தமிழகத்தில், அரசு கலை - அறிவியல் கல்லூரிகளில் இருந்த சுழற்சி முறையிலான வகுப்புகளை ரத்து செய்து, ஒரே ‘ஷிப்ட்’ நடைமுறையை உயர்கல்வித்துறை அமல்படுத்தி, அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, காலை 9.30 முதல் மாலை 4.30 மணி வரை கல்லூரிகளில் வகுப்புகள் நடைபெறும்.

மதியம் 1.30 முதல் 2.30 மணி வரை உணவு இடை வேளைக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. தலா ஒரு மணி நேரம் வீதம் தினமும் 6 பாடவேளைகள் நடத்தப்பட வேண்டும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் பொறுப்பு வகிக்கும் கே.விவேகானந்தன், அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எனவே, நடப்பு கல்வியாண்டு முதல், இனி அனைத்து அரசு கல்லூரிகளிலும் ஒரே ஷிப்ட் முறை, அமல் படுத்தப்படும் என்று உயர் கல்வித்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments