புதிய கல்விக் கொள்கை மத்திய அரசு ஒப்புதல்..!

0 4539
மத்திய கேபினட்டின் ஒப்புதலை பெற்ற பிறகு புதிய கல்விக் கொள்கை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த கல்வி முறையை மாற்றி அமைக்கும் பல அம்சங்கள் இந்த புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ளன.

மத்திய கேபினட்டின் ஒப்புதலை பெற்ற பிறகு புதிய கல்விக் கொள்கை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த கல்வி முறையை மாற்றி அமைக்கும் பல அம்சங்கள் இந்த புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ளன.

புதிய கல்விக் கொள்கையின் சிறப்பு அம்சங்களை மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவ்டேகர், ரமேஷ் பொக்ரியால் ஆகியோர் கூட்டாக டெல்லி செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டனர்.

வரும் கல்வி ஆண்டில் பழைய மற்றும் புதிய கல்விக்கொள்கை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2030-க்குள் அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை அடைய புதிய கல்விக்கொள்கை உதவும் என கூறப்பட்டுள்ளது.

எம்.பில் படிப்புகள் நிறுத்தப்படுவதுடன், உயர்கல்வி அமைப்புகளை ஒழுங்குபடுத்த ஒரே வாரியம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளில் இணைப்புக்கல்லூரி என்ற முறையும் நிறுத்தப்படும். கல்வி அறிவு குறைவாக உள்ள பகுதிகளில் சிறப்பு கல்வி மண்டலங்கள் உருவாக்கப்படும்.

நாடு முழுவதும் ஒரே கல்வித்தரம் கொண்டு வரப்படும் எனவும் கல்விக்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்படும் எனவும் புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. இணைய வழி பாடங்களை அந்தந்த மாநில மொழிகளில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் கணினிகளின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டு அவை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும்.

கல்வி கற்பதில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் மென்பொருள் வெளியிடப்படும். கல்வி நிறுவனங்கள் தங்கள் விருப்பம் போல கட்டணங்களை உயர்த்துவது தடுக்கப்படும், உயர்கல்வி படிக்கும் மாணவர்கள், ஓரிரு வருடங்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு மீண்டும் படிப்பை தொடரவும் அனுமதி வழங்கப்படும் என புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

34 ஆண்டுகளாக கல்விக்கொள்கையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்த நிலையில், இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான நிபுணர் குழு புதிய கல்விக் கொள்கையை உருவாக்கியுள்ளது.

உலக கல்வியில் இந்தியாவை வல்லரசாக மாற்றும் திட்டத்துடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கை புதிய கல்வியாண்டு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படும் செப்டம்பர்-அக்டோபர் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும். புதிய கல்விக் கொள்கையின் படி, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இனி மேல் கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றம் பெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments