ரூ.50,000 ஆயிரம் பணம் கேட்டு கடைக்காரரை மிரட்டிய ரவுடியை பிடிக்க தனிப்படை

0 1866

செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கத்தில் மருந்து கடைகாரர் ஒருவரிடம் ரூபாய் 50ஆயிரம் பணம் கேட்டு ரவுடி ஒருவன் கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோ வெளியாகியுள்ளது.

மண்ணிவாக்கம் பகுதியில் மருந்தகம் நடத்தி வருகிறார் வினோத்குமார். இவரிடம் 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான சிலம்பரசன் என்பவன் 50ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகின்றது.

இது குறித்து வினோத்குமார் மெடிக்கல் அசோசியேஷனுக்கு தகவல் அளித்த நிலையில், மீண்டும் வினோத்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு ரவுடி சிலம்பரசன் மிரட்டியுள்ளான். தாம் கேட்ட பணத்தை கொடுக்க வில்லை என்றால், குடும்பத்தோடு நிம்மதியாக வாழ முடியாது என்றும், தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் எந்த பகுதியிலும் கடை நடத்த முடியாது என மிரட்டல் விடுத்துள்ளான்.

வினோத்குமார் எவ்வளவோ கெஞ்சியும், பணத்தை கொடுக்க அவகாசம் கோரியும், அதனை சற்றும் ரவுடி சிலம்பரசன் பொருட்படுத்தவில்லை. இந்த நிலையில், மிரட்டல் குறித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்த வினோத்குமார், வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தலைமறைவாகி உள்ளார். புகாரின் பேரில் ரவுடி சிலம்பரசனை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments