ரபேல் விமானங்கள் வருகையால் இந்திய ராணுவ வரலாற்றில் புதிய சகாப்தம் தொடக்கம் -ராஜ்நாத் சிங்

0 3536

ரபேல் விமானங்களின் வருகையை சுட்டிக்காட்டி இந்திய ராணுவ வரலாற்றில் புதிய சகாப்தம் தொடங்கி விட்டதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பிரான்சில் இருந்து புறப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள், ஹரியானா மாநிலம் அம்பாலா விமானபடைதளத்தை இன்று மதியம் வந்தடைந்தன.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட ராஜ்நாத் சிங், ரபேல் விமானங்கள் அம்பாலாவில் பத்திரமாக தரையிறங்கி விட்டன என்றும், ரபேல் விமானங்களின் வருகை இந்திய ராணுவ வரலாற்றில் புதிய சகாப்தம் தொடங்கி விட்டதை குறிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பன்முக தன்மை கொண்ட அந்த விமானம், இந்திய விமானப்படையின் திறன்களில் புரட்சியை ஏற்படுத்தும் என்றும், இந்திய விமானப்படையின் புதிய திறனை கண்டு, நாட்டின் பிரதேச ஒருமைப்பாட்டுக்கு சவால் விடுக்க விரும்பும் நாடுகள் கவலைப்படும் என்றும் ராஜ்நாத் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments