ஏப்ரல் - ஜூன் காலாண்டில் ரூ. 249 கோடி நிகர நட்டம் - மாருதி சுசுகி

மாருதி சுசுகி நிறுவனத்துக்கு கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத வகையில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 249 கோடி ரூபாய் நிகர நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் வாகன விற்பனை ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் மூவாயிரத்து 677 கோடி ரூபாயாகும். கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் 18 ஆயிரத்து 735 கோடி ரூபாய்க்கு வாகனங்கள் விற்பனையாகியிருந்தன.
கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 4 லட்சம் வாகனங்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டில் 76ஆயிரத்து 599 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.
கொரோனா சூழலில் தயாரிப்பு மற்றும் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் முதல் காலாண்டில் 249 கோடி ரூபாய் நிகர நட்டம் ஏற்பட்டுள்ளதாகப் பங்குச்சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தொழிலாளர்களின் உடல்நலம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிப்பதாக மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.
#MarutiSuzuki logged a net loss of ₹2.49 billion rupees for the three months ended June 30, compared with a profit of ₹14.36 billion a year ago. https://t.co/a6aPYvSy7I
— The Hindu Business (@thehindubiz) July 29, 2020
Comments