திருட்டு மோட்டார் சைக்கிள்கள் திருடர்களுக்கே வாடகை.. சங்கிலி பறிப்பு கும்பல் வாக்குமூலம்..!

0 3930
ஊரடங்கால் வீடு புகுந்து கொள்ளையடிக்க முடியாத கும்பல் ஒன்று, நடைபயிற்சி செய்யும் பெண்களை குறிவைத்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளது. மோட்டார் சைக்கிள்களை திருடி நகை பறிப்பில் ஈடுபடும் திருடர்களுக்கு வாடகைக்கு விட்டு வந்த திருடர்கள் சிக்கிய பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

ஊரடங்கால் வீடு புகுந்து கொள்ளையடிக்க முடியாத கும்பல் ஒன்று, நடைபயிற்சி செய்யும் பெண்களை குறிவைத்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளது. மோட்டார் சைக்கிள்களை திருடி நகை பறிப்பில் ஈடுபடும் திருடர்களுக்கு வாடகைக்கு விட்டு வந்த திருடர்கள் சிக்கிய பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.  

சென்னை ஆர்கே மடம் சாலையில் கடந்த ஜூன் மாதம் நடைப் பயிற்சி மேற்கொண்டிருந்த பெண் ஒருவரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, பல பெண்களிடம் இருந்து நகைபறிப்பு புகார்கள் வந்தன.

இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க போலீசாரால் தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படையினர் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடைபெற்ற இடத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையர்கள், மோட்டார் சைக்கிள்களில் பயணிக்கும் காட்சிகள் இருந்ததை வைத்து விசாரணையை தீவிரபடுத்தினர்.

இதில் பெரும்பாக்கத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவனின் கும்பல் இரு பிரிவாகப் பிரிந்து சென்னையின் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியதை கண்டுபிடித்தனர். மேலும் அக்கும்பலைச் சேர்ந்த புளியந்தோப்பை சேர்ந்த அபி மற்றும் நஜீரையும், சிட்லபாக்கத்தைச் சேர்ந்த அஜய் ராகுலையும் கைது செய்து 8 சவரன் தங்க நகைகள், 8 பைக்குகுளையும் பறிமுதல் செய்தனர். 

3 பேரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில், தங்கத்தின் விலை உயர்ந்து உள்ளதால் அந்நகைகளை திருடினால் அதிக பணம் கிடைக்கும் என்ற ஆசையினால் நகை பறிப்பில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். ஊரடங்கில் வீட்டில் அனைவரும் அடைந்து கிடப்பதால் வீடு புகுந்து கொள்ளை அடிக்க முடியாது என்பதால், வெளியே நடைபயிற்சி செல்லும் பெண்கள், ஆட்டோவில் ஓரமாக அமர்ந்து பயணிக்கும் பெண்களை குறிவைத்ததாக வாக்குமூலம் அளித்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சங்கிலி பறிப்புக்கு பல இடங்களில் திருடிய மோட்டார் சைக்கிள்களையே 3 பேரும் பயன்படுத்தியதாகவும், அந்த வாகனத்தை திருடர்களுக்கு வாடகைக்கு விட்டதாகவும் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments