ஆன்லைன் சூதாட்ட விளம்பரம் : விராட்கோலி - தமன்னாவுக்கு எதிர்ப்பு

0 1858

ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்துள்ள கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில், ஆன்லைன் ரம்மி, எம்.பி.எல் என அழைக்கப்படும் மொபைல் ப்ரீமியர் லீக் உள்ளிட்ட இணைய வழி சூதாட்டங்கள் மூலம் பணத்தை இழக்கும் பலர், தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

எனவே, இணைய வழி சூதாட்டங்களுக்கு தடை விதிக்க வலியுறுத்தி கொடுக்கப்பட்டுள்ள புகார் மனுவில், விராட் கோலி, தமன்னா இருவருக் கும் இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருப்பதால் ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் அவர்கள் நடிப்பது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என கூறப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments