சுஷாந்த்தை தற்கொலைக்கு தூண்டியதாக நடிகை ரியா சக்ரபர்த்தி மீது புகார்

0 2227
சுஷாந்த்தை தற்கொலைக்கு தூண்டியதாக நடிகை ரியா சக்ரபர்த்தி மீது புகார்

சுஷாந்த் சிங்கை தற்கொலைக்குத் தூண்டியதாக அவரது தந்தை அளித்த புகாரில் கைது செய்யப்படலாம் என்பதால், சுஷாந்தின் காதலி நடிகை ரியா சக்ரபர்த்தி முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை மும்பை போலீசர் விசாரித்து வரும் நிலையில், அவரது சொந்த ஊரான பீகார் மாநிலம் பாட்னாவில் சுஷாந்தின் தந்தை, காதலி ரியா சக்ரபர்த்திக்கு எதிராக புகார் அளித்தார்.

அதில் ரியா சக்ரபர்த்தி சுஷாந்தை மிரட்டி தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும், பண மோசடி செய்து தற்கொலைக்கு தூண்டியதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில் தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள பாட்னா ராஜீவ் நகர் போலீசார், ரியாவை கைது செய்வதற்காக மும்பை விரைந்துள்ளனர்.

இதையடுத்து முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்வது தொடர்பாக பிரபல வழக்கறிஞர் சதீஷ் மன்ஷிண்டேவுடன் ரியா ஆலோசனை நடத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments