கொரோனாவுக்கு மணிப்பூரில் முதல் பலி!

0 1619

இந்தியாவில் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாகவே இருந்து . இந்த குட்டி மாநிலத்தில் 2,317 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 1,612 பேர் குணமடைந்துள்ளனர். கிட்டத்தட்ட 705 பேர் சிகிக்சையில் உள்ளனர். இது வரை, இந்த மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒருவர் கூட உயிரிழந்தது இல்லை.

இந்த நிலையில், கடந்த மே 5-ந் தேதி இதய நோய் , கிட்னி பாதிப்பு, சர்க்கரை நோய் உள்ளிட்ட இணை நோய்களுடன் உடல்நிலை பாதிக்கப்பட்ட ஒருவர், இம்பாலா ரீஜனல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சுமார் 56 வயதான அவரை மருத்துவமனையில் சேர்த்த போது , கொரோனா தொற்று இல்லை. அந்த நபருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டு வந்தது,

கடந்த ஜூலை 26- ந் தேதி நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் , இன்று அதிகாலை 2 மணியளவில் அவர் இறந்து போனார். மணிப்பூர் மாநிலத்தில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட முதல் இறப்பு இது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments