பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்

0 32018
2020-21ஆம் கல்வியாண்டில், மாணவர்களை சேர்ப்பதற்கான அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

2020-21ஆம் கல்வியாண்டில், மாணவர்களை சேர்ப்பதற்கான அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, நெல்லை ஆகிய ஐந்து மண்டலங்களிலும் உள்ள கல்லூரிகளின் பெயர், அனுமதிக்கப்பட்ட இடங்கள், பொறியியல் மாணவர் சேர்க்கை குறியீட்டு எண் ஆகிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன்  2019-20ஆம் கல்வி ஆண்டிற்கு அனுமதிக்கப்பட்ட இடங்கள் குறித்த  விபரமும் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த தகவல்களை  https://www.annauniv.edu/cai/Options.php என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம். விண்ணப்பித்தும் இப்பட்டியலில் இடம் பெறாமல்  உள்ள சில கல்லூரிகள்  வரும் 15ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களை அளித்தால் அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments