ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மகள் ருபையா சயீதுக்குத் தொந்தரவு... காவல்நிலையத்தில் புகார்

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் முப்தி முகமது சயீதின் மகள் ருபையா சயீது, மர்ம நபர்கள் செல்பேசியில் தொந்தரவு தருவதாகக் கூறிச் சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவர் அபிராமபுரம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் இரண்டு செல்பேசி எண்கள் மற்றும் ஒரு தொலைபேசி எண்ணிலிருந்து சில நபர்கள் அழைத்துத் தொடர்ந்து தொல்லை தருவதாகக் கூறியுள்ளார்.
இது குறித்து இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ள அபிராமபுரம் காவல்துறையினர் சைபர் கிரைம் பிரிவின் உதவியுடன் விசாரித்து வருகின்றனர்.
1989ஆம் ஆண்டு முப்தி முகமது சயீது மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, தீவிரவாதிகள் ருபையாவைக் கடத்திச் சென்று பிணைக் கைதியாக வைத்துக் கொண்டு, சிறையில் உள்ள தங்கள் அமைப்பைச் சேர்ந்த 13 பேரை விடுவிக்க வேண்டும் என நிபந்தனை விதித்தனர்.
5 பேரைச் சிறையில் இருந்து விடுவித்த பின்னர்தான் ருபையா மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments