ஊரடங்கை நீட்டிப்பதா? மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

0 10275
ஊரடங்கை நீட்டிப்பதா? கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலியில் ஆலோசனை நடத்தினார்.

ஊரடங்கை நீட்டிப்பதா? கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலியில் ஆலோசனை நடத்தினார்.

கொரோனா பரவலைத் தடுக்கக் கடைப்பிடிக்கும் ஊரடங்கு வரும் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் சென்னைத் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலியில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

அப்போது கொரோனா பாதிப்பு அதிகரிப்பு, அதைக் கட்டுப்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகள், பாதிப்பு அதிகரிப்பதற்கான காரணம் ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.

வரும் 31ஆம் தேதிக்குப் பின் ஊரடங்கை நீட்டிப்பதா? கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதா? பொதுப்போக்குவரத்தை அனுமதிக்கலாமா? மண்டலத்துக்குள் இ பாஸ் இன்றி தனியார் வாகனங்களை அனுமதிக்கலாமா என்றும் ஆலோசிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments