ராஜ்பவனில் 3 பேருக்கு கொரோனா - தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

0 1425
ராஜ்பவனில் 3 பேருக்கு கொரோனா - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்

ராஜ்பவனில் மேலும் 3பேருக்கு கொரோனா உறுதியானதால் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், 7 நாள் சுயதனிமைபடுத்தி கொண்டார். 

ஆளுநர் மாளிகை பாதுகாப்புப் படை வீரர்கள் 84 பேருக்கு ஏற்கெனவே கொரோனா உறுதியாகி இருந்தது. இந்நிலையில் ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், 38 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், அதில்  3 பேருக்கு  கொரோனா உறுதியாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநருக்கும் வழக்கமான மருத்துவ பரிசோதனை (regular medical check up) நடத்தப்பட்டதாகவும், அவர் பூரண உடல்நலத்துடன் இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் மருத்துவர் அறிவுரையின்பேரில் ஆளுநர்  7 நாள் சுயதனிமைபடுத்தி கொண்டார் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் ஆளுநரின் தனி உதவியாளர் கொரோனா பாதித்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments