நடிகர் விஜய்யின் நண்பன் பட பாணியில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த கிராம மக்கள்

0 15202
நடிகர் விஜய்யின் நண்பன் பட பாணியில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த கிராம மக்கள்

ஊரடங்கு காரணமாக மருத்துவமனைக்கு செல்ல முடியாததால், நடிகர் விஜய்யின் நண்பன் திரைப்பட பாணியில் வீடியோ கால் மூலம் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பெண்ணுக்கு பிரசவம் பார்த்த சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஹனகல் பகுதியை சேர்ந்த வாசவிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. முழு ஊரடங்கு காரணமாக போக்குவரத்து வசதி இல்லாததால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள பெண் மருத்துவர் ஒருவர் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் அறிவுரை வழங்க, கிராம மக்களும் அதன் படி பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளனர். இதன் மூலம் வாசவிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments