மனைவி சாப்பாடு தராததால், முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் தீக்குளிப்பு!

0 2541
வினோத்குமார் தீக்குளித்த வீடு

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தீக்குளித்தார். 

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே உள்ள திருவஞ்சேரி செல்லியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வினோத் குமார்( வயது 33) . இவருக்கு திவ்யா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான வினோத் குமார் மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருவது வழக்கம்.

மனைவியுடன் தகராறு ஏற்பட்டால், வினோத் குமார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்திற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுவது வாடிக்கை. ஏற்கனவே , இரண்டு முறை முதலமைச்சர் வீட்டுக்கு இது போல மிரட்டல் விடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 9 - ந் தேதி மனைவி திவ்யா இவருக்கு சாப்பாடு அளிக்க மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த வினோத்குமார் மீண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக போன் செய்துள்ளார். தொடர்ந்து, சேலையூர் போலீசாரால் வினோத்குமார் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் சிறையிலிருந்து வெளியில் வந்த வினோத் குமார் நேற்று இரவு மீண்டும் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார் அப்போது ஆத்திரமடைந்த வினோத் குமார் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ குளித்தார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.

தற்போது 40 சதவீத தீக்காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments