உட்கட்டமைப்புத் துறையில் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க அரசு முயற்சி - நிதின் கட்கரி

0 706
உட்கட்டமைப்புத் துறையில் நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க அரசு முயன்று வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

உட்கட்டமைப்புத் துறையில் நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க அரசு முயன்று வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சாலை மேம்பாட்டுத் திட்டம் குறித்து இணையவழிக் கருத்தரங்கில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசினார். அப்போது உட்கட்டமைப்புத் துறையில் நூறு விழுக்காடு நேரடி வெளிநாட்டு முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளதால், முதலீட்டை ஈர்க்க உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, பிரிக்ஸ் வங்கி ஆகியவற்றுடன் இந்தியா பேசி வருவதாகக் குறிப்பிட்டார்.

இதேபோல் ஓய்வூதிய நிதி, காப்பீட்டு நிதி, நிதி நிறுவனங்கள் ஆகியவற்றிடமும் முதலீட்டை ஈர்க்கப் பேச்சு நடத்தி வருவதாகக் குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments