தேசிய அளவில் 15 லட்சத்தை கடந்த கொரோனா தொற்று பாதிப்பு

0 1056
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 47 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 47 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்துள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 7,717 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் 3,490 பேருக்கும், மேற்கு வங்கத்தில் 2,134 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், கேரளாவில் 1,167 பேரும், குஜராத்தில் 1,108 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, நாடு முழுவதிலும் 650-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழக்க, கொரோனா பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்துள்ளது. நோய்த்தொற்று உறுதியானவர்களில், சுமார் 9 லட்சத்து 90 ஆயிரம் பேர் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments