சாலை அமைப்பது தொடர்பாக இரு குடும்பங்களிடையே மோதல் : ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதில் 5 பேர் காயம்

0 2265
கேரள மாநிலம் ஆராட்டுப்புழாவில் இரு குடும்பங்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரையொருவர் மரக்கட்டைகளால் தாக்கிக் கொண்ட காட்சி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

கேரள மாநிலம் ஆராட்டுப்புழாவில் இரு குடும்பங்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரையொருவர் மரக்கட்டைகளால் தாக்கிக் கொண்ட காட்சி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

திருச்சூர் மாவட்டம் ஆராட்டுப் புழாவில் ஊராட்சி சார்பில் ஒரு தெருவில் 3 மீட்டர் அகலச் சாலை அமைக்கத் திட்டமிட்டுள்ளனர். இது தங்கள் நிலத்தைப் பாதிக்கும் என ஒரு பிரிவினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

3 மீட்டர் அகலத்துக்குச் சாலை அமைத்தே ஆக வேண்டும் என மற்றொரு பிரிவினர் கூறினர். இதையடுத்து அவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மரக்கட்டைகளை எடுத்து ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில் 5 பேர் காயமடைந்தனர். காவல்துறையினர் தலையிட்டு மோதலை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments