இளைஞரை நோக்கி சாவியை எறிந்த போலீஸ்... நெற்றியில் சொறுகிய சாவி ! - உத்ரகாண்டில் சம்பவம்

0 7226

உத்ரகாண்ட் மாநிலத்தில் ஹெல்மட் அணியாத இளைஞரை போலீஸ் தாக்கியதால் மோதல் ஏற்பட்டது. 

உத்ரகாண்ட் மாநிலம் ருத்ராபூர் என்ற நகரத்தில் தீபக் என்ற இளைஞர் தன் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது, ஹெல்மட் அணிந்திருக்கவில்லை. போலீஸார் தடுத்து நிறுத்தி ஹெலமட் ஏன் அணியவில்லை என்று விசாரித்தனர். அப்போது, போலீஸாரிடத்திலிருந்து அவர்கள் தப்பி ஓடியுள்ளனர். போலீஸ் ஒருவர் தன் கையில் வைத்திருந்த சாவியை இளைஞர்களை நோக்கி எறிந்துள்ளார். சாவி நேரே அந்த இளைஞரின் நெற்றியில் போய் குத்தி விட்டது. இதனால், அந்த இளைஞர் வலியில் துடித்தார்.image

நெற்றியில் குத்தி சாவியோடு ஊருக்கு ஓடி சென்ற இளைஞர் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி அழுதார். இதையடுத்து, திரண்டு வந்த கிராம மக்கள் போலீஸாருடன் மோதலில் ஈடுபட்டனர். போலீஸர் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தினர். கூட்டத்தை கலைக்க போலீஸார் தடியடி நடத்த வேண்டியதாகி விட்டது. இதற்கு பிறகே , கூட்டம் கலைந்து ஓடியது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட மூன்று போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காயமடைந்த இளைஞர் தீபக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போலீஸார் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே வேளையில், மக்களை கண்டபடி தாக்கும் போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று போலீஸ் உயரதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments