கொரோனாவிலிருந்து மீண்ட பூனை.. ஆறே நாட்களில் பூரண குணம்..!

0 2477
இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பூனை, ஆறே நாட்களில் சிகிச்சைக்குப் பிறகு பூரண குணமடைந்துள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பூனை, ஆறே நாட்களில் சிகிச்சைக்குப் பிறகு பூரண குணமடைந்துள்ளது.

அந்நாட்டு சுற்றுசூழல் அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பூனையின் உரிமையாளர்களிடமிருந்து மட்டுமே அதற்கு கொரோனா பரவியதாகவும், மற்ற விலங்குகளிடம் இருந்து நோய்த்தொற்று பரவியதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இங்கிலாந்தில் பூனைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது இதுவே முதல்முறை எனவும் குறிப்பிடப்பட்டுளது.

முன்னதாக, பூனை இனம் கொரோனா வைரசால் மிக எளிதாக பாதிக்கப்படக் கூடியது மட்டுமின்றி, மற்ற பூனைகளுக்கும் பரப்பக் கூடியது என, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments