வயிற்று வலியுடன் அனுமதிக்கப்பட்டவரின் வயிற்றில் முழு நீளக் கத்தி

0 2193
டெல்லியில் வயிற்று வலியால் அவதிப்பட்டவரின் அடிவயிற்றிலிருந்து 20 சென்டி மீட்டர் நீளமுடைய கத்தி அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டு உள்ளது.

டெல்லியில் வயிற்று வலியால் அவதிப்பட்டவரின் அடிவயிற்றிலிருந்து 20 சென்டி மீட்டர் நீளமுடைய கத்தி அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டு உள்ளது.

ஹரியானாவைச் சேர்ந்த 28 வயது நபர், கடும் வயிற்று வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு எடுக்கப்பட்ட எக்ஸ்-ரேவில் கல்லீரலுக்கு அருகே ஒரு முழுக் கத்தி இருந்தை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

விசாரணையில், போதைப்பழக்கத்திற்கு அடிமையான அந்த நபர் கஞ்சா கிடைக்காததால், கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பாக கத்தியை முழுமையாக விழுங்கியதாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையில், 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பாதிக்கப்பட்டவரின் வயிற்றிலிருந்து கத்தி வெற்றிகரமாக எடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments