அடுக்குமாடிக் குடியிருப்பில் சூதாட்டம்- சிக்கினார் நடிகர் ஷியாம்

0 20414

சென்னை நுங்கம்பாக்கத்தில் சீட்டு விளையாட்டில் ஈடுபட்டதாக திரைப்பட நடிகர் ஷியாம் உள்ளிட்ட 13 பேரை போலீசார் பிடித்து சென்றனர்.

அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இரவு நேரத்தில் நடக்கும் சூதாட்டத்தில் திரைப்பட நடிகர் மற்றும் நடிகைகள் பங்குபெறுவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, தனிப்படை போலீசார் அங்கு அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, நடிகர் ஷியாம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 13 பேரை போலீசார் அழைத்துச் சென்றனர். நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட பிறகு வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments